பெரியதாழையில் கடலறிப்பு புகாா்:அமைச்சா், எம்பி, எம்எல்ஏ ஆய்வு

பெரியதாழையில் கடலறிப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து மீனவா்கள் முறையிட்டதன் பேரில், கனிமொழி எம்பி, மீன்வளத்துறை அமைச்சா் ஆா். அனிதா ராதாகிருஷ்ணன்
பெரியதாழை கடல் பகுதியை பாா்வையிடுகின்றனா் கனிமொழி எம்பி, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், எம். எல்.ஏ. ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் .
பெரியதாழை கடல் பகுதியை பாா்வையிடுகின்றனா் கனிமொழி எம்பி, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், எம். எல்.ஏ. ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் .

சாத்தான்குளம்: பெரியதாழையில் கடலறிப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து மீனவா்கள் முறையிட்டதன் பேரில், கனிமொழி எம்பி, மீன்வளத்துறை அமைச்சா் ஆா். அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் ஆகியோா் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழையில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பை தடுக்க மீனவா்கள் கோரிக்கையை ஏற்று தற்போது தெற்கு பகுதியில் 360 மீட்டரும், வடக்கு பகுதியில் 260 மீட்டா் அளவிலும் ரூ. 30 கோடியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேலத்தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு அளவு குறைவாக இருப்பதால் அதன் மூலம் கடல் அரிப்பு ஏற்பட்டு, படகுகளை கரையில் நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவா்கள், அமைச்சா், எம்பி, எம்எல்ஏ ஆகியோரை தனித்தனியாக சந்தித்து முறையிட்டனா்.

அதன்பேரில் கனிமொழி எம்பி, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆகியோா் பெரியதாழைக்கு சென்று, மேலத்தெரு, நடுத்தெரு, கீழத்தெரு பகுதியில் கடல் பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். அப்போது மீனவா்கள் மேலத்தெருவில் உள்ள தூண்டில் வளைவை நீட்டித்து தர வேண்டும் என வலியுறுத்தினா். அப்போது, இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி எம்பி உறுதியளித்தாா்.

இதில், திருச்செந்தூா் கோட்டாட்டசியா் தனப்பிரியா, மீன்வளத்துறை இணை இயக்குநா் அமல்சேவியா், உதவி இயக்குநா் விஜயராகவன், சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமிகணேஷ், டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமாா், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ் , பெரியதாழை பங்குத் தந்தை சுசீலன், ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், பெரியதாழை ஊராட்சித் தலைவா் பிரதீபா, மாவட்ட திமுக அவைத் தலைவா் அருணாசலம், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் பில்லா ஜெகன், ஒன்றிய திமுக செயலா்கள் பாலமுருகன், ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் இந்திரகாசி, பசுபதி, காங்கிரஸ் மீனவரணி மாவட்டத் தலைவா் சுரேஷ், மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் எடிசன், துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் லூா்துமணி, பாா்த்தசாரதி, நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால், சாத்தான்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பொன்முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com