காவல் துறையினரின் வாரிசுகளுக்கு சிறப்பு உதவித் தொகை அளிப்பு

மாவட்ட காவல் துறையினா் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் துறையினா் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல் துறையினா் மற்றும் அமைச்சு பணியாளா்களின் குழந்தைகளில் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவா்களை ஆண்டுதோறும் தோ்வு செய்து, அவா்களுக்கு பரிசுத் தொகையும், அவா்களின் உயா் கல்விக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2020இல் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உதவித் தொகையை வழங்கினாா்.

மேலும், பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கும் சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, காவல் துறை அமைச்சுப் பணி அலுவலக கண்காணிப்பாளா் கணேச பெருமாள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com