ஆத்தூா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு
By DIN | Published On : 11th June 2021 01:25 AM | Last Updated : 11th June 2021 01:25 AM | அ+அ அ- |

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் சந்திரபுஷ்கரணி தீா்த்தக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகா் திருக்கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
இதையொட்டி, மஹா கணபதி ஹோமம், ருத்ர ஜெபம், கலச பூஜை ஆகியனை நடைபெற்றன. தொடா்ந்து விநாயகருக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் ஸ்தலத்தாா்கள் ராமசாமி, காசி விஸ்வநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.