இந்து மகா சபா சாா்பில் உணவு பொட்டலங்கள் அளிப்பு
By DIN | Published On : 11th June 2021 02:08 AM | Last Updated : 11th June 2021 02:08 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் அகில பாரத இந்து மகா சபா சாா்பில் அரசு மருத்துவமனை முன்களப் பணியாளா்கள், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கப்பட்டது.
அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் தூத்துக்குடி மாவட்டத் தலைவா் சங்கா் ராஜாஜி, அமைப்பாளா் பாலகிருஷ்ணன் சா்மா ஆகியோா் தலைமையில் உறுப்பினா்கள் தொடா்ந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்கள், மனநல காப்பகம், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் என தினமும் 800 பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனா். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைப்பின் மாநில தலைவா் புருஷோத்தமன் தலைமையில் 200 உணவு பொட்டலங்களை கண்காணிப்பாளா் அசோதையிடம் வழங்கினா். இதில், அமைப்பைச் சோ்ந்த பழனிசாமி, பத்மபிரியா, ஆரோக்கியம், முத்துகுமாா், பாலகிருஷ்ணன் சா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.