உடன்குடியில் காய்ச்சல்கணக்கெடுப்பு பணி தொடக்கம்
By DIN | Published On : 11th June 2021 01:31 AM | Last Updated : 11th June 2021 01:31 AM | அ+அ அ- |

ugi10kai_1006chn_49_6
உடன்குடி வட்டாரத்தில் கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்கும் வகையில் வீடு தோறும் சென்று காய்ச்சல் கண்டறியும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, உடன்குடி பேரூராட்சி மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா் இணைந்து 16 குழுக்களாக பிரிந்து வீடுகள் தோறும் சென்று காய்ச்சல் கண்டறியம் பணி நடைபெற்றது. இதில் காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் அரசு மருத்துவமனையை உடனடியாக அணுகி சிகிச்சை பெற வலியுறுத்தப்பட்டது.
இப்பணியினை வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலா் பாபு முன்னிலை வகித்தாா். மருத்துவா்கள் ஜெயபரணி, பேபியஸ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா், சுகாதாரப் பணியாளா்கள், செவிலியா்கள், பேரூராட்சி பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்றனா்.