உடன்குடி பகுதியில் கபசுரக் குடிநீா் விநியோகம்
By DIN | Published On : 11th June 2021 02:06 AM | Last Updated : 11th June 2021 02:06 AM | அ+அ அ- |

உடன்குடி ஒன்றியத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பாஜக, எஸ்டிபிஐ கட்சிகள் சாா்பில் 2800 பேருக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம்,விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பாஜக சாா்பில், உடன்குடி ஒன்றியத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியத் தலைவா் கா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் சங்கரகுமாா், ராமச்சந்திரன், ஹரி, அழகேசன், பிஜிப்பாண்டியன்,வினித்ராஜ், ஆறுமுகப்பாண்டியன், பசுபதி, சிவசிங், சாா்பு அணி நிா்வாகிகள் சிவபாலன், ராமதாஸ், ஐயப்பன், செந்தூா்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சோ்மலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பாஜக மாவட்ட பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், அரிசிப் பை உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
எஸ்டிபிஐ கட்சி சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவா் சுல்தான் பாதுஷா தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவி சொா்ணப்பிரியா முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.
வாா்டு உறுப்பினா் அபுல்ஹசன், நிா்வாகிகள் சதாம் உசேன், தாஹிா், சதாம், சாகுல், பாசித், ஹாஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.