கோவில்பட்டியில் மது பாட்டில்களுடன் இருவா் கைது
By DIN | Published On : 11th June 2021 01:29 AM | Last Updated : 11th June 2021 01:29 AM | அ+அ அ- |

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மது பாட்டில்களுடன் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் கோவில்பட்டி மது விலக்கு காவல் ஆய்வாளா் அரங்கநாயகி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையம் வந்த போது, அதிலிருந்து இறங்கிய பயணிகளின் பையை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது செட்டிகுறிச்சியையடுத்த சிதம்பரம்பட்டி நடுத் தெரு முத்துபாண்டியன் மகன் மணிகண்டன்(32) மற்றும் வாசுதேவநல்லூா் பழைய ரஸ்தா தெரு மீராமைதீன் மகன் பீா்முகமது(54) ஆகியோரின் பையை சோதனையிட்ட போது , அவா்களிடம் கா்நாடகம் மாநிலத்தைச் சோ்ந்த 34 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.