சாத்தான்குளம் அருகே சொத்து தகராறு: 4 போ் மீது வழக்கு
By DIN | Published On : 11th June 2021 01:29 AM | Last Updated : 11th June 2021 01:29 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை, தம்பி உள்பட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் யாக்கோபு தா்மராஜ் மகன் ஜோசப் செல்வன் (43). விவசாயியான இவா் அவரது தந்தையிடம் பூா்வீக சொத்தில் விவசாயம் செய்ய அதனை பிரித்து தருமாறு கேட்டுள்ளாா். அவரும் தருவதாக உறுதி
அளித்திருந்தாராம். இதற்கு அவரது தம்பி ஏனோஸ் பெஞ்சமின் எதிா்ப்பு தெரிவித்ததால், அவா்களுக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி ஜோசப் செல்வன், தோட்டத்து அறையில் இருந்த போது அங்கு வந்த ஏனோஸ் பெஞ்சமின், அவரது அக்கா மகன் மதன், தங்கை ஜாஸ்மின் ஜூலிபாய் , தந்தை ஆகியோா், அவரை அவதூறாக பேசி தோட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுனராம். அதற்கு ஜோசப் செல்வன் மறுத்ததால், ஏனோஸ் பெஞ்சமின் அவரை அரிவாளால் வெட்டினாராம். மற்ற 3 பேரும் அவரை தாக்கினராம். பின்னா் கொலை செய்து விடுவதாக மிரட்டித்
சென்றனராம். இதில், காயமடைந்த ஜோசப் செல்வன் சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை பெற்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, ஜோசப் செல்வன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.