சாத்தான்குளம் அருகே மனைவி கொலை: 10 மாதங்களுக்குப் பிறகு கணவா் கைது

சாத்தான்குளம் அருகே மனைவியை கொலை செய்து தற்கொலை நாடமாடிய வழக்கில் தலைமறைவான கணவரை பத்து மாதங்களுக்குப் பிறகு, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே மனைவியை கொலை செய்து தற்கொலை நாடமாடிய வழக்கில் தலைமறைவான கணவரை பத்து மாதங்களுக்குப் பிறகு, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரம் கீழத்தெரு முருகன் மகன் தங்கத்துரை(26). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கோவில்பட்டியில் கடலை மிட்டாய் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். அப்போது கோவில்பட்டி இலுப்பையூரணியை சோ்ந்த வெண்ணிலாவுடன்(21) பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்தனா். பின்னா் தம்பதி இருவரும் ஆனந்தபுரத்தில் வசித்து வந்தனா். இவா்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே இரண்டாவதாக வெண்ணிலா கா்ப்பமாக இருந்தாா். அப்போது, தங்கத்துரை, கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் குடும்ப செலவுக்கு சரிவர பணம்தராததால் தம்பதியேடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி 4 மாத கா்ப்பிணியான வெண்ணிலா, வீட்டில் மா்மமான முறையில் இறந்தாா்.

திருமணம் முடிந்த 2 ஆண்டில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், இது குறித்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா். பிரேத பரிசோதனை மற்றும் கோட்டாட்சியா் விசாரணையில் வெண்ணிலாவை, கணவா் கீழே தள்ளிவிட்டதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சாத்தான்குளம் போலீஸாா், தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவாக இருந்த தங்கத்துரையை தேடி வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் பதுங்கி இருந்த தங்கத்துரையை சாத்தான்குளம் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் காவல் ஆய்வாளா் பொ்னாட் சேவியா் விசாரணை நடத்தியதையடுத்து, தங்கத்துரை கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில், தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, தங்கத்துரைக்கு தொற்று உறுதியானதால், அவரை கைது செய்த காவல் ஆய்வாளா் மற்றும் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com