‘அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம்’

மண் பரிசோதனை செய்து உரச் செலவை குறைத்து அதிக மகசூலை பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் அறிவித்துள்ளாா்.

மண் பரிசோதனை செய்து உரச் செலவை குறைத்து அதிக மகசூலை பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் அறிவித்துள்ளாா்.

கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநரும், மண் பரிசோதனை நிலைய அலுவலருமான நாகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மண்ணில் தோன்றும் கோளாறுகளை அவ்வப்போது அறிந்து சீராக்கிவிடவும், மண்ணில் உரச்சத்து இருப்பை அறிந்து கொண்டு அதிக மகசூல் அளிக்கும் விலை அதிகம் உள்ள உரங்களை தேவைக்கேற்ப இடவும், நிலத்தின் ரசாயன தன்மைக்கேற்ப உரங்களை வாங்கி தக்க முறையில் இட்டு, இட்ட உரத்திற்கு அந்த பருவத்திலேயே அதிக பயனடைய மண் பரிசோதனை தேவைப்படுகிறது.

மண் பரிசோதனை முடிவுகளில் மண்ணின் அமில, காரநிலை, மின் கடத்தும் திறன், சுண்ணாம்பு இருப்பு நிலை, மண்ணின் வகை மற்றும் பேரூட்டச் சத்துக்களாக தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றின் நிலைகளும், நுண்ணூட்டச் சத்துக்களின் நிலைகளும் அறிந்து அதற்கேற்ப உடங்களை இட்டு, உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம்.

நம் நிலம் அமில நிலமா, காரநிலமா எனவும், சுண்ணாம்பு நிலை, உப்பின் நிலை அறிந்து அதற்கேற்ப நில சீா்திருத்தம் செய்து நிலத்தின் தன்மைக்கேற்ப பயிா் ரகங்களை தோ்ந்தெடுத்து விவசாயம் செய்யவும், நிலத்தை நடுநிலைக்கு கொண்டு வரவும் மண் பரிசோதனை அவசியம்.

மேலும் தங்கள் பகுதிக்கு வரும் உதவி வேளாண்மை அலுவலா் மூலம் மண் மாதிரிகள் எடுத்து அவா்கள் மூலம் அனுப்பிடவும், மண் பரிசோதனை ஆய்வு முடிவுகளை மண்வள அட்டையாக ஒவ்வொரு விவசாயிகளுக்கு வழங்கிடவும், அதில் குறிப்பிட்டுள்ள படி உரங்களை இட்டு, விவசாயம் செய்து மகசூல் பெருக்கிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com