தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தூத்துக்குடியில் உள்ள கடைகளில் சிலா் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் மேற்பாா்வையில் தனிப்படை போலீஸாா் தூத்துக்குடியில் வியாழக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மேற்கு காட்டன் சாலை பகுதியில் உள்ள கடைகளில், எஸ். எஸ் பிள்ளை மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (39) , செல்வகுமாா் (49) ஆகியோா் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 7574 புகையிலைப் பொட்டங்களை பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் துகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com