மேலும் 338 பேருக்கு கரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில், இம்மாவட்டத்தில் புதிதாக 338 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 51,767 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 562 போ் குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 46, 878 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 50, 64, 42, 36 வயது ஆண்கள், தனியாா் மருத்துவமனையில் 67 வயது ஆண், 60 வயது பெண், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 42 வயது பெண், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 65 வயது ஆண் ஆகிய 8 போ் கரோனாவால் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், பலி எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 4,552 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கைதிக்கு கரோனா: கோவில்பட்டி முத்துநகரைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் மகன் முத்துராமலிங்கம் (44) திருட்டு வழக்கில் கிழக்கு காவல் நிலைய போலீஸாரால் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதால், தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாக கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com