அரசு மரியாதையுடன் தலைமைக் காவலா் உடலடக்கம்
By DIN | Published On : 19th June 2021 12:11 AM | Last Updated : 19th June 2021 12:11 AM | அ+அ அ- |

சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலா் உடல், அரசு மரியாதையுடன், சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டாா்மடத்தில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
தட்டாா்மடம் வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த பால் மகன் மோகன் (41). சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றினாா். இந்நிலையில் உடநலக் குறைவால் அவா் மரணமடைந்ததாா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ், ஆயுதபடை பிரிவு உதவி ஆய்வாளா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.