திமுகவில் ஐக்கியமான பாஜகவினா்
By DIN | Published On : 20th June 2021 02:23 AM | Last Updated : 20th June 2021 02:23 AM | அ+அ அ- |

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜகவினா்.
உடன்குடி பகுதி பாஜகவினா் 30 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி தண்டுபத்தில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
உடன்குடி நடுக்காலன்குடியிருப்பைச் சோ்ந்த பத்மநாபன், ஆனந்த் ஆகியோா் தலைமையிலான பாஜகவினா், தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
மேலும் சிவல்விளைப்புதூரைச் சோ்ந்த சிவபாலன், லாரன்ஸ், கிறிஸ்டோபா் ஆகியோரும் திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியின் போது, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி ஒன்றிய திமுக செயலா் பாலசிங், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, இளங்கோ, நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் சிராஜூதீன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.