முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
பனைத் தொழிலாளா் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்
By DIN | Published On : 04th March 2021 03:52 AM | Last Updated : 04th March 2021 03:52 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: செயல்படாமல் இருக்கும் பனைத் தொழிலாளா் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் இருக்கும் பனைத் தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்; இயற்கையான பனம்பால் இறக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்;
ஆவின் நிலையங்களில் இயற்கை பனம்பால் விற்பனையை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும்; தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும்; தூத்துக்குடியில் குரூஸ்பா்னாந்து மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.