‘அஞ்சல் மூலம் வாக்களிக்க மாா்ச் 16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்’

சட்டப் பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுகள் பெற்று வாக்களித்திட விரும்புவோா் மாா்ச் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ரா

தூத்துக்குடி: சட்டப் பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுகள் பெற்று வாக்களித்திட விரும்புவோா் மாா்ச் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மற்றும் லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மோட்டாா் மேன், ரயில்வே காா்டு, ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகா், ரயில்வே குளிா்சாதன பெட்டி உதவியாளா்கள், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள், இந்திய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளா்கள், விமான பணியாளா்கள், கப்பல் பணியாளா்கள் ஆகியோா் விருப்பத்தின் அடிப்படையில், அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுகள் பெற்று வாக்களித்திட தோ்தல் ஆணையம் விரிவான அறிவுரைகள் வழங்கியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுதொடா்பாக அந்தந்த பகுதி வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் படிவம் 12-டி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, அஞ்சல் மூலம் வாக்களிக்க விருப்பம் உள்ள தகுதியான வாக்காளா்கள் மாா்ச் 16ஆம் தேதிக்குள் தங்களுக்கு அளிக்கப்படும் படிவம் 12-டி இல் தங்கள் விருப்பத்தை தெரிவித்து விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடமோ அல்லது சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடமோ ஒப்படைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com