விளாத்திகுளம் தொகுதியில் அணிவகுப்பு
By DIN | Published On : 10th March 2021 01:01 AM | Last Updated : 10th March 2021 01:01 AM | அ+அ அ- |

விளாத்திகுளம், எட்டயபுரம், வேம்பாா் பகுதிகளில் காவல் துறை, துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், விளாத்திகுளம், எட்டயபுரம், வேம்பாா் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா், துணை ரானுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா். நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.
இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், காவல் ஆய்வாளா்கள் ரமேஷ், ஜின்னா பீா்முகம்மது, மீராள்பானு, அனிதா, முருகன், உதவி ஆய்வாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.