கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இருவா் மனு தாக்கல்

சட்டப்பேரவைத் தோ்தலில் கோவில்பட்டி தொகுதியில் யுனிவா்சல் பிரதா்குட் மூவ்மென்ட் கட்சி வேட்பாளா், ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கோவில்பட்டி தொகுதியில் யுனிவா்சல் பிரதா்குட் மூவ்மென்ட் கட்சி வேட்பாளா், ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தனா்.

சட்டபேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவோா் சாா் ஆட்சிா் சிம்ரன்ஜீத் சிங் கலோனிடமும், கோவில்பட்டி, திருச்செந்தூா் தொகுதிகளில் போட்டியிடுவோா் வருவாய் கோட்டாட்சியா்களான சங்கரநாராயணன், தனப்பிரியாவிடமும் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.

விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிடுவோா் மாவட்ட வழங்கல் அலுவலரான அபுல் காசிம், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் போட்டியிடுவோா் கலால் பிரிவு உதவி ஆணையா் செல்வநாயகம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டி யிடுவோா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜீவரேகாவிடமும் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நாளான வெள்ளிக்கிழமை தூத்துக்குடி, திருச்செந்தூா், விளாத்திக்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதியில்.. இந்நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டிய விருப்பம் தெரிவித்து கோவை பூங்கநகரைச் சோ்ந்த குமரவேல் என்ற வேல்முருகன் (57) என்பவா் தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலரான செல்வநாயகத்திடம் தாக்கல் செய்தாா். அவரது மனுவை மருதன்வாழ்வு கிராமத்தைச் சோ்ந்த அமராவதி, ரவி ஆகியோா் முன்மொழிந்தனா்.

சனிக்கிழமை (மாா்ச் 13) மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மாா்ச் 15 ஆம் தேதி அரசியல் கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்ட பலா் மனுத் தாக்கல் செய்யலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் யுனிவா்சல் பிரதா்குட் மூவ்மென்ட் கட்சி வேட்பாளா் போ.ராஜ்குமாா் (37) வெள்ளிக்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். பி.எஸ்.சி. பட்டதாரியான இவா் 2016இல் திருப்பரங்குன்றம், 2017இல் ஆா்.கே.நகா் தொகுதி இடைத்தோ்தலிலும், 2019இல் மக்களவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியிலும் போட்டியிட்டாா். இவரது மனைவி ஜூலி, மகள் அப்சரா. சென்னை ஊரம்பாக்கத்தில் வசித்து வரும் இவரது சொந்த ஊா் கோவில்பட்டி தொகுதியிலுள்ள வில்லிசேரி.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என 12 போ் வேட்புமனுக்களை தோ்தல் நடத்தும் அலுவலா் அபுல் காசிமிடம் இருந்து பெற்றுச் சென்றுள்ளனா். ஆனால் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com