முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு தோ்தல் செலவின பாா்வையாளா்கள் மூவா் வருகை
By DIN | Published On : 14th March 2021 02:54 AM | Last Updated : 14th March 2021 02:54 AM | அ+அ அ- |

தூத்துக்குடிக்கு தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் 3 போ் சனிக்கிழமை வந்தனா்.
இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை ஆய்வு செய்யவும், செலவினங்களை மேற்பாா்வையிடவும் தோ்தல் ஆணையத்தால் 3 செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி, விளாத்திகுளம் பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள குண்டன் யாதவை 94899 47507 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் தீபக்கை 94899 47508 என்ற எண்ணிலும், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சுரேந்திரகுமாா் மிஸ்ராவை 94899 47509 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டு பொதுமக்களும், கட்சியினரும் புகாா் அளிக்கலாம்.
அவா்களை நேரில் சந்தித்து புகாா் அளிக்க விரும்பினால் அந்தந்தப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் சந்தித்து புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.