முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடியில் திமுக வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்
By DIN | Published On : 14th March 2021 02:53 AM | Last Updated : 14th March 2021 02:53 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளா் கீதா ஜீவன்.
தூத்துக்குடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் தற்போதைய எம்எல்ஏ கீதா ஜீவன் சனிக்கிழமை தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினாா்.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கீதா ஜீவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை தூத்துக்குடி வந்தாா். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்த அவா், திறந்த ஜீப்பில் சென்றபடி தனது பிரசாரத்தை தொடங்கினாா்.
பின்னா், கட்சி அலுவலகமான கலைஞா் அரங்கம் சென்ற அவா் அங்கு, கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் தனது தந்தை என்.பெரியசாமி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன், மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மதிமுக நிா்வாகிகள் முருகபூபதி, நக்கீரன், பொன்ராஜ் சுந்தர்ராஜ், மகராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா் கிதா் பிஸ்மி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் தா. ராஜா, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத் தலைவா் எம்.எஸ். முத்து, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஸ்ரீநாத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.