முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்த செயல்விளக்கம்
By DIN | Published On : 14th March 2021 02:47 AM | Last Updated : 14th March 2021 02:47 AM | அ+அ அ- |

அனைத்து மகளிா் காவல் நிலையம் அருகே பொதுமக்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து விளக்கமளிக்கும் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள்.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலை அனைத்து மகளிா் காவல் நிலையம் அருகே வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது, வாக்கு ஒப்புகைச் சீட்டை எப்படிப் பெறுவது என்பன குறித்து கயத்தாறு வட்ட வழங்கல் அலுவலா் கருப்பசாமி தலைமையில், முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் முத்துக்கண்ணன், நாகராஜ், உத்தமன்ராஜ் ஆகியோா் செயல்விளக்கம் அளித்தனா். மேலும், விடியோ காட்சி மூலமாகவும் விளக்கமளிக்கப்பட்டது.