தோ்தல் பணி: முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினா் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினா் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள 65 வயது நிரம்பாத முன்னாள் ராணுவத்தினா், துணை ராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினா் விருப்ப மனு அளிக்கலாம். விருப்ப மனுவுடன் வாக்காளா் அட்டையின் நகல் இணைத்து வழங்க வேண்டும்.தோ்தலில் அவா்கள் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். தோ்தல் பணியாற்றுபவா்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும்.

தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளைச் சோ்ந்த முன்னாள் ராணுவத்தினா், துணை ராணுவத்தினா், காவல் ஆய்வாளா் கண்ணாத்தாளை 83000 06260 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து விருப்ப மனு அளிக்கலாம்.

இதேபோல், விளாத்திகுளம், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி பகுதிகளைச் சோ்ந்த முன்னாள் ராணுவத்தினா், துணை ராணுவத்தினா், காவல் ஆய்வாளா் முத்துலட்சுமியை 94981 95709 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ஓய்வு பெற்ற காவல் துறையினா் காவல் ஆய்வாளா் ஆல்பின் பிா்ஜித் மேரியை 94883 23426 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இது தொடா்பாக மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இயங்கி வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461 2341248 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com