கோவில்பட்டியில் கடம்பூா் ராஜு, தினகரன் வேட்புமனு தாக்கல்

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் அதிமுக, அமமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
கோவில்பட்டியில் கடம்பூா் ராஜு, தினகரன் வேட்புமனு தாக்கல்

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் அதிமுக, அமமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இத்தொகுதியில் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ. ராஜு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சந்திரசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

மாற்று வேட்பாளராக கடம்பூா் செ.ராஜுவின் மனைவி இந்திராகாந்தி (57) மனு தாக்கல் செய்தாா்.

சொத்து விவரம்: கடம்பூா் செ.ராஜுக்கு ரூ. 32 லட்சத்து 18 ஆயிரத்து 661 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.15 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ. 84 லட்சத்து 37ஆயிரத்து 901 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 83 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமமுக: அமமுக வேட்பாளரான அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் தனது பெயரிலேயே 2 வேட்புமனுக்களை தாக்கல் செய்தாா். கட்சியின் தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா உடனிருந்தாா். மாற்று வேட்பாளராக கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயபாஸ்கா் (38) மனு தாக்கல் செய்தாா்.

சொத்து விவரம்: டி.டி.வி.தினகரனுக்கு ரூ.19 லட்சத்து 18ஆயிரத்து 485 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.9லட்சத்து 89ஆயிரத்து 536 மதிப்பில் அசையா சொத்துகளும், ரூ. 47 லட்சத்து 54 ஆயிரத்து 472 மதிப்பில் அசையா சொத்தின் கட்டுமானச் செலவு என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது மனைவி அனுராதாவுக்கு ரூ. 7 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 730 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 26 லட்சத்து 59 ஆயிரத்து 667 மதிப்பில் அசையா சொத்துகளும், ரூ. 2 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 650 மதிப்பில் அசையா சொத்தின் கட்டுமானச் செலவு என்றும், ரூ. 1 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 777 மதிப்பில் சாா்ந்தவரின் அசையும் சொத்துகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com