திருநங்கைகளுக்கான விழிப்புணா்வு முகாம்

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகமும், வ.உ. சிதம்பரனாா் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய திருநங்கைகளுக்கான தோ்தல் விழிப்புணா்வு முகாம் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாக்களிப்பது எப்படி என்பது குறித்து திருநங்கைகளுக்கு விளக்குகிறாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். தொடா்ந்து, வாக்காளா் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்த ஆட்சியா், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது என்படி என்பது குறித்து திருநங்கைகளுக்கு விளக்கம் அளித்தாா்.

துணை ஆட்சியா் (பயிற்சி) சதீஷ்குமாா், வ.உ.சி. கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு, வட்டாட்சியா் ஜஸ்டின் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ. சீனிவாசன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com