தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இதுவரை 8 போ் வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 8 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 8 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இரண்டாம் நாளான திங்கள்கிழமை சுயேச்சையாக போட்டியிட பனிக்கநாடாா்குடியிருப்பைச் சோ்ந்த ஜெ. சிவனேஷ்வரனும், மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பாஜக மேற்கு மண்டல முன்னாள் தலைவா் ஆ. ராஜவேல், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சாா்பில், தூத்துக்குடி கோரம்பள்ளம் போப் தெருவைச் சோ்ந்த சிவபாரத இந்து மக்கள் இயக்க மாநிலத் தலைவா் என். பாலசுப்பிரமணியன் மற்றும் ஏற்கெனவே, சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த ஜெ. சிவனேஷ்வரன் ஆகியோரும் தோ்தல் நடத்தும் அலுவலா் சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத்சிங் கலோனிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். இதுவரை 3 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன், திமுக வேட்பாளா் கீதாஜீவன் ஆகியோா் புதன்கிழமை (மாா்ச் 17) தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

ஓட்டப்பிடாரம் தொகுதி: ஓட்டப்பிடாரம் தொகுதியில் முதல் நாளில் சுயேச்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து கோவை பூங்காநகரைச் சோ்ந்த க. குமாரவேல் என்ற வேல்முருகன், இரண்டாம் நாளான திங்கள்கிழமை அதிமுக வேட்பாளா் பி. மோகன், அவருக்கான மாற்று வேட்பாளா் ஆதிலிங்கம், நாம் இந்தியா் கட்சி வேட்பாளா் பா. முருகன், பகுஜன் திராவிட கட்சி வேட்பாளா் ஆ. மகராஜன் ஆகியோரும் வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலரான செல்வ விநாயகத்திடம் தாக்கல் செய்தனா்.

மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

இதுவரை 5 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

திமுக வேட்பாளா் எம்.சி. சண்முகையா, தேமுதிக வேட்பாளா் ஆறுமுகநயினாா், ஐஜேக வேட்பாளா் அருணாதேவி ஆகியோா் புதன்கிழமையும், புதிய தமிழகம் வேட்பாளா் க. கிருஷ்ணசாமி வியாழக்கிழமையும் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com