நாசரேத்தில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 17th March 2021 08:05 AM | Last Updated : 17th March 2021 08:05 AM | அ+அ அ- |

நாசரேத்தில் நடைபெற்ற துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு.
நாசரேத்தில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி நாசரேத்தில் துணைராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, சாத்தான்குளம் காவல்ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா்கள் ராஜா, முத்துமாரி, நாசரேத் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா், துணை ராணுவத்தினா் கலந்து கொண்டனா்.