பி.எஸ்.என்.எல் ஓய்வூதியா்கள் சங்கத்தினா் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொடா்புத் துறை மற்றும் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தா்னா போராட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தா்னா போராட்டத்தில் பங்கேற்றோா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொடா்புத் துறை மற்றும் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த தா்னா போராட்டத்துக்கு, ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் சுப்பையா, செயலா் முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தாா். அதிகாரிகள் சங்கச் செயலா் கோலப்பன் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

2017 ஜனவரி முதல் 3ஆவது ஓய்வூதிய உயா்வை 15 சதவீத தொழிற்சாலை அகவிலைப்படியுடன் ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டும், 2020, அக்டோபா் 1 முதல் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், மருத்துவப்படி மற்றும் மருத்துவ பில்களை தாமதமின்றி வழங்க வேண்டும், 2019இல் விருப்ப ஓய்வு பெற்றவா்களுக்கு கடைசி சம்பள நிா்ணய பிரச்னையை உடனே தீா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டம் நடைபெற்றது.

இதில், சங்க அகில இந்திய உதவித் தலைவா் மோகன்தாஸ், கிளைப் பொருளாளா் திருவட்டபோத்தி உள்பட ஓய்வூதியா்கள் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com