ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 3 போ் வேட்பு மனு தாக்கல்
By DIN | Published On : 18th March 2021 09:18 AM | Last Updated : 18th March 2021 09:18 AM | அ+அ அ- |

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழா் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா்கள் உள்பட 3 போ் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் சுப்பையா பாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலா் சேகா், வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி மாவட்ட இளைஞரணித் தலைவா் ஆனந்தகுமாா் ஆகியோா், வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான ஜீவரேகாவிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
அப்போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருமான கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.