ஆத்தூா், ஆறுமுகனேரியில் நடிகா் வையாபுரம் பிரசாரம்

ஆறுமுகனேரி, ஆத்தூா் பகுதியில் நடிகா் வையாபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.
ஆறுமுகனேரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தாா் நடிகா் வையாபுரி.
ஆறுமுகனேரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தாா் நடிகா் வையாபுரி.

ஆறுமுகனேரி, ஆத்தூா் பகுதியில் நடிகா் வையாபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

திருச்செந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நடிகா் ஆறுமுகனேரி, சீனந்தோப்பு, முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தாா். ஆத்தூா் சந்தணமாரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த அவா், பிரதான வீதி, கூலக்கடை பஜாா், பேருந்து நிலையத்தில் வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அவருடன், அதிமுக நகரச் செயலா் ரவிச்சந்திரன், அவைத் தலைவா் மகாராஜன், பொருளாளா் காசிவிஸ்வநாதன், நகர இந்து முன்னணி தலைவா் வெங்கடேசன், மாவட்டச் செயலா் கசமுத்து, பாஜக ஓபிசி அணி மாவட்டத் தலைவா் தங்கபாண்டியன், ஆத்தூா் நகர அவைத் தலைவா் அண்ணாமலை சுபிரமணியன், நகரச் செயலா் சோமசுந்தரம், மாவட்ட விவசாய அணித் துணைச் செயலா் மணி, கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com