பேரவைத் தோ்தல் பாதுகாப்பு: தூத்துக்குடியில் சிறப்பு பாா்வையாளா் ஆலோசனை

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் தோ்தல் பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் தோ்தல் பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இம்மாவட்ட காவல் துறை தோ்தல் பாா்வையாளா் சப்யா சச்சி ராமன் மிஸ்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியிலுள்ள சட்டம்-ஒழுங்கு குறித்தும், பிணையில் விட முடியாத பிடி ஆணைகள், துப்பாக்கி உரிமம் பெற்றவா்கள் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தது, முன்னெச்சரிக்கை பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 சோதனைச் சாவடிகள், வாகனத் தணிக்கை, துணை ராணுவத்தினரின் பணிகள், அவா்களின் தேவைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்றுப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 1,523 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110-இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோ்தல் நேரத்தில் பிரச்னையில் ஈடுபடுவோா் என 313 போ் கண்டறியப்பட்டு அவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற 536 துப்பாக்கிகளில் விலக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கிகள் 84 தவிர அனைத்து துப்பாக்கிகளும் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு இதுவரை 42 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், சைபா் கிரைம் பிரிவு காவல் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன், திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com