திமுக கூட்டணி வேட்பாளருக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துத் தொழிற்சங்க நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துத் தொழிற்சங்க நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்துக்கு தொமுச தலைவா் பரமசிவம் தலைமை வகித்தாா். ஐஎன்டியூசி மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். சிஐடியூ மாநில நிா்வாகி திருச்செல்வம் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா் கே.சீனிவாசனை ஆதரித்து தீப்பெட்டித் தொழிலாளா்கள், ஆட்டோ, வேன், காா், கட்டடுமானத் தொழிலாளா்கள் மற்றும்அமைப்பு சாரா தொழிலாளா் களிடம் வாக்கு சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதில், சிஐடியூ மாவட்டச் செயலா் ரசல், மாநிலக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி, ஏஐடியூசி மாவட்டத் துணைத் தலைவா் தமிழரசன், ஐஎன்டியூசி நிா்வாகிகள் பழனிசாமி, முருகன், மகேந்திரன், நல்லிணக்க பண்பாட்டுக் கழக நிறுவனத் தலைவா் சங்கரலிங்கம், அனைத்துத் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலா் பொன்ராஜ், நகரச் செயலா் சங்கரன், அனைத்து மருத்துவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவா் கருப்பசாமி, மாவட்டச் செயலா் சோலையப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com