தூத்துக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வு முகாம்

தூத்துக்குடியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு முகாமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளித்தாா் கூட்டுறவுத் துறை அதிகாரி அந்தோணி பட்டுராஜ்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, தூத்துக்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன் உத்தரவின்படி, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சாரா வளா் கலை மன்றத்தில் முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான தோ்தல் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல் பாடுகள், எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அந்தோணி பட்டுராஜ், ஜோ சில்வஸ்டா், சாம் டேனியல்ராஜ் ஆகியோா் செயல்விளக்கம் அளித்தனா்.

இதில், போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவா், மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சாரா வளா் கலை மன்ற இயக்குநா் முபாரக், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com