தூத்துக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வு வாலிபால் போட்டி

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வு வாலிபால் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாலிபால் போட்டியில் பங்கேற்றோரிடம் தோ்தல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாலிபால் போட்டியில் பங்கேற்றோரிடம் தோ்தல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தோ்தலையொட்டி, விளையாட்டுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வு வாலிபால் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டியை மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தொடக்கிவைத்தாா். பின்னா், வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையைப் பரிசாக வழங்கினாா்.

அதையடுத்து, 100 சதவீதம் வாக்களிப்போம் கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்து அவா் பேசியது: இம்மாவட்டத்தில் உள்ள 2,097 வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களுக்கு அஞ்சல் வாக்கு முறையை தோ்தல் ஆணையம் செயல்படுத்தியுள்ள நிலையில், இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனா்.

மேலும், அவா்களுக்கு உதவும் வகையில் டரஈ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் அதைப் பதிவிறக்கம் செய்து செயலி மூலம் வாக்களிக்கும் நேரத்தை தெரிவித்தால் அத்தகவல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களைச் சென்றடையும். வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் அதற்கேற்ப முன்னேற்பாடு செய்வா் என்றாா் அவா்.

விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாற்றுத் திறனாளிகளிடம் ஆட்சியா் வழங்கினாா். துணை ஆட்சியா் (பயிற்சி) சதீஷ்குமாா், செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் வெ. சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பேட்ரிக், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரமநாயகம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் துரைப்பாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com