என்.எஸ்.எஸ். மாணவா்கள் கள ஆய்வு
By DIN | Published On : 25th March 2021 07:38 AM | Last Updated : 25th March 2021 07:38 AM | அ+அ அ- |

குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டனா்.
இப்பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், குருவிகுளத்தில் இருந்து கோவில்பட்டி வரை உள்ள பகுதிகளான கழுகுமலை, லட்சுமிபுரம், வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிா் வகைகள், அதை தாக்கும் பூச்சி நோய்கள், சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்ட இயற்கை, செயற்கை உரங்கள், மகசூல், மழை அளவு, வானிலை மாற்றம் மற்றும் கடந்த ஆண்டு நிகழ்ந்த விளைச்சலோடு ஒப்பிடுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்தனா்.
தொடா்ந்து, வீட்டு மனைகளாகும் விளை நிலங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கவும், விவசாயிகள் பணிகள் குறித்து இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், விவசாயத்திற்கு பயன்படும் அரசின் மானியத் திட்டங்கள், பயிா் காப்பீடு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் சுப்பாராஜூ செய்திருந்தாா்.