கயத்தாறில் இன்று முதல்வா் பிரசாரம்
By DIN | Published On : 26th March 2021 08:43 AM | Last Updated : 26th March 2021 08:43 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை (மாா்ச் 26) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
இதுகுறித்து, அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான கடம்பூா் செ. ராஜு வெளியிட்ட அறிக்கை: கோவில்பட்டி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான என்னை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இத்தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறு பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
இதில், அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.