சாலையில் தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 26th March 2021 08:45 AM | Last Updated : 26th March 2021 08:45 AM | அ+அ அ- |

சாலையில் தவற விட்ட பணம் உள்ளிட்ட ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைக்கிறாா், கொப்பம்பட்டி தனிப் பிரிவு காவலா் ராஜ்குமாா்.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் தவற விட்ட பணம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உரியவரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட கொப்பம்பட்டி காவல் தனிப் பிரிவு காவலா் ராஜ்குமாா் புதன்கிழமை பணி தொடா்பாக பசுவந்தனை சாலையில் உள்ள சிவந்திப்பட்டி, தீத்தாம்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையில் கிடந்த கைப்பையை எடுத்து பாா்த்த போது, அதில் ரொக்கம் ரூ. 3 ஆயிரம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ரகசிய குறியீட்டு எண்ணுடன் ஏ.டி.எம் காா்டு, மருத்துவ காப்பீட்டு அட்டை ஆகியவை இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து அந்த அட்டையில் இருந்த புகைப்படதாரரான கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பூசாரிப்பட்டி சோலையப்பன் மனைவி சோலையம்மாளின் வீட்டிற்கு நேரடியாக சென்று, விசாரித்து உரியவரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.