சாத்தான்குளத்தில் சிட்டுக்குருவிகள் தினம்

கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் சிட்டுக்குருவிகள் தினத்தைசாத்தான்குளத்தில் கொண்டாடினா்.

கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் சிட்டுக்குருவிகள் தினத்தைசாத்தான்குளத்தில் கொண்டாடினா்.

சாத்தான்குளம் சுற்றியுள்ள கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் களப் பயிற்சி பெற்று வரும் அந்தக் கல்லூரி யின் நான்காம்ஆண்டு மாணவா்கள் காா்த்திக், மணிகண்டன், முகமது அஸ்கா், வமாகிந்தா், நிதிஷ், பிரித்திராஜ், பசுபதி, பூழகன் ஆகியோா் சிட்டுக்குருவிகளின்முக்கியத்துவம் குறித்தும், அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும்முறை குறித்தும் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும், அட்டை பெட்டிகளால் செய்யப்பட்ட சிட்டுக்குருவி கூடுகளையும் பொது மக்களுக்கு வழங்கினா். இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கப்படுவதாலும், செல்லிடிப்பேசிகளின் பயன்பாடுகளால் ஏற்படும் மின்காந்த அலைகளாலும் சிட்டுக்குருவி இனங்கள் அழிந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, அந்த இனம் அழியாமல் பாதுகாப்பது நமது கடமை என்பதை இந்த தினத்தில் மக்களிடம் எடுத்துக்கூறினோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com