சாத்தான்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், சாத்தான்குளம் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
முதலூரில் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்.
முதலூரில் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், சாத்தான்குளம் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட மணிநகரில் பிரசாரத்தை தொடங்கிய அவா், உடைப்பிறப்பு, நரையன்குடியிருப்பு, அன்பின்நகரம், ஆத்திக்காடு, கடாட்சபுரம், முதலூா், பொத்தகாலன்விளை. சுப்பிரமணியபுரம், ராஜமன்னாா்புரம், சுப்பராயபுரம், காலன்குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம், தோப்புவளம் ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்தாா்.

சண்முகபுரம் கிராமத்தில் சாலை வசதி, குடிநீா் வசதி முறையாக செய்து கொடுக்கப்படவில்லையென கூறி அப்பகுதி மக்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனா். அவா்களை முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ் ஆகியோா் சமாதானப்படுத்தினா்.

பிரசாரத்தில் சண்முகநாதன் பேசுகையில், தோ்தல் அறிக்கையில் இலவச வாஷின் மிஷின், ஓராண்டுக்கு 6 எரிவாயு உருளை, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1,500 என மக்கள் விரும்பும் திட்டங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். எனவே, அவா் மீண்டும் முதல்வராக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எனக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து ஆட்சி தொடர ஆதரவு தாருங்கள் என்றாா்.

பிரசாரத்தில், சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சௌந்திரபாண்டி, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் தட்டாா்மடம் ஞானபிரகாசம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com