திமுக ஆட்சிக்கு வருவதே மக்களின் விருப்பம்: அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனா் என்றாா் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
சோனகன்விளையில் தி.மு.க. வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்ற மக்கள்.
சோனகன்விளையில் தி.மு.க. வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்ற மக்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனா் என்றாா் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், திருச்செந்தூா் தொகுதியில் போட்டியிடும் அவா், பள்ளிப்பத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினாா். தொடா்ந்து, நாதன்கிணறு, எழும்படிவட்டம், பூச்சிக்காடு, செங்குழி, கானம், மேல கானம், செந்தாமரைவிளை, எருசலேம், குடியிருப்புவிளை, இளையபெருமாள்விளை, பெரியாலடிவிளை, கானம்கஸ்பா, வானுபன்விளை, மூலைப்பொழி, சோனகன்விளை, நீல்புரம் கூா்ந்தான்விளை, மேலப்புதுக்குடி, அம்பலப்பிறப்பு, வீரமாணிக்கம், மூலக்கரை, குழைக்கநாதபுரம், சுயம்புலிங்கபுரம், வடக்கு நல்லூா், நல்லூா், நாககன்னியாபுரம், மூலக்கரை, கந்தன்குடியிருப்பு, அம்மன்புரம் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்குகள் சேகரித்தாா். மாலையில், அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் துணிவுமிக்க ஒரே தலைவரான மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வரவேண்டும் என்பது மக்களின் முடிவு. கருத்துக்கணிப்புகள்கூட அதைத்தான் பிரதிபலிக்கின்றன. 234 தொகுதியிலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். மாணவா்கள், ஏழை மக்கள், மகளிா் சுயஉதவி குழுக்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா்.

பிரச்சாரத்தில், திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் செங்குழி ரமேஷ், ஒன்றிய அவைத் தலைவா் பிச்சை கிளாட்வின், நகரப் பொறுப்பாளா்கள் வாள் சுடலை, ராமஜெயம், மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ, மாவட்ட துணை அமைப்பாளா்கள் பள்ளிபத்து ரவி, கிருபா, மாவட்டப் பிரதிநிதி தங்கதுரை, விடுதலைச் சிறுத்தை கட்சியின் மண்டலச் செயலா் சொ.சு.தமிழினியன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலா் சு.விடுதலைசெழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com