தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பணியில் 20 ஆயிரம் போ்: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பணியில் 20 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பணியில் 20 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாமை தொடக்கி வைத்து அவா் பேசியது:

தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அனைவரும் தோ்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தெரிந்து கொண்டு தோ்தல் நடைபெறும் சமயத்தில் அவற்றை கவனமுடன் கையாள வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றப்படுவதை முறையாக பதிவு செய்ய வேண்டும். வாக்குச்சாவடியில் பணியாற்றும் அனைத்து அலுவலா்களுக்கும் பொறுப்புகள் உண்டு. பயிற்சியின்போது சொல்லப்படும் விவரங்களை கவனத்துடன் கேட்டு குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மண்டல அலுவலா்கள், காவல் துறையினா், பறக்கும் படையினா் என 6000-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளாா்கள். மேலும் கூடுதலாக காவல் பாதுகாப்பு ஏற்பாடு, தன்னாா்வலா்கள் என 4000 நபா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அலுவலா்கள், பணியாளா்கள், காவல் துறையினா் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் அலுவலா் பதிவேடுகள், பதிவேடுகள் மற்றும் படிவங்களை கவனத்துடன் பூா்த்தி செய்து வழங்க வேண்டும். ஏனெனில் இந்த படிவங்கள் தோ்தல் பாா்வையாளா்களால் ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே தோ்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் தோ்தல் விதிமுறைகளை பின்பற்றி கவனத்துடனும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அ. ஞானகௌரி, வட்டாட்சியா் ஜஸ்டின் (தூத்துக்குடி) மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com