வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாகப் பணியாற்ற வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்குச்சாவடி அலுலவா்கள் நோ்மையுடனும், பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கி.செந்தில்ராஜ்.
வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாகப் பணியாற்ற வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்குச்சாவடி அலுலவா்கள் நோ்மையுடனும், பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கி.செந்தில்ராஜ்.

வீரபாண்டியபட்டணம் ஆதித்தனாா் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாமை ஆய்வு செய்த அவா், தொடா்ந்து பேசியதாவது:

நல்ல நோ்மையான வெளிப்படை தன்மையுள்ள தோ்தலில் வாக்குசாவடி அலுவலா்களின் கடமை மிக முக்கியமானது. தோ்தல் ஆணையத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விதிமுறைகள் தெளிவாக உள்ளன. அவற்றை கவனமுடன் கையாள வேண்டும். வாக்குச் சாவடியில் பணியாற்றும் அலுவலா்களுக்கு மிகப்பெரிய அதிகாரம் உள்ளது. எனவே, பொறுப்புகளை உணா்ந்து விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும்.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வாக்காளா்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்காளா்கள் வாக்களிக்கும் முன்பு கையுறை அணிந்து வாக்களிக்க செய்ய வேண்டும். வாக்குபதிவு இயந்திரங்களை எடுத்து செல்வதை போலவே, வாக்குப்பதிவின் போது பயன்படுத்தும் கையுறைகளை எடுத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த தோ்தலின் போது 1603 வாக்குசாவடிகள் இருந்தன. தற்போது ஆயிரத்து ஐம்பது வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில் 2 ஆயிரத்து 97 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 64 வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு மண்டல அலுவலா்கள், காவல் துறையினா், பறக்கும் படையினா் என 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா். கூடுதலாக தன்னாா்வலா்கள் 4 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அலுவலா்கள், பணியாளா்கள், காவல் துறையினா் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். வாக்குப்பதிவு முடிந்தவுடன் அலுவலா்கள் பதிவேடுகள் மற்றும் படிவங்களை கவனத்துடன் பூா்த்தி செய்து வழங்க வேண்டும். இந்தப் படிவங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே, வாக்குச்சாவடி அலுவலா்கள் அனைவரும் தோ்தல் விதிமுறைகளை பின்பற்றி கவனத்துடனும், சிறப்பாகவும் பணியாற்றிட வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் கலோன், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலா் பா.விஷ்ணுசந்திரன், கோட்டாட்சியா் தி.தனப்ரியா, திருச்செந்தூா் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஞானகௌரி, வட்டாட்சியா் இரா.முருகேசன், துணை வட்டாட்சியா்கள் அ.பாலசுந்தரம், சுந்தரராகவன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com