உடன்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 29th March 2021 01:56 AM | Last Updated : 29th March 2021 01:56 AM | அ+அ அ- |

உடன்குடி ஒன்றியத்தில் திருச்செந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மணப்பாட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா், புதுக்குடியேற்று, அத்தியடித்தட்டு, தண்டுபத்து, செட்டிவிளை,சிதம்பரபுரம், வெள்ளாளன்விளை, சீரணிச் சாலை, வட்டன்விளை, சீயோன் நகா், பரமன்குறிச்சி, முந்திரித் தோட்டம், தோட்டத்தாா்விளை, சோலை குடியிருப்பு, குங்குமம்மாள்புரம், மானாடு, சுந்தரபுரம், செம்மறிக்குளம், சத்யாநகா், திருப்பணி, அணைத்தலை, பூலி குடியிருப்பு, கல்விளை, வலசை கிணறு, ராமசுப்பிரமணியபுரம் உள்பட பல்வேறு பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் ஒன்றிய அதிமுக செயலா் த.தாமோதரன், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய அவைத் தலைவா் த. மகாராஜா, ஒன்றியக் குழு முன்னாள் தலைவி ஜெ.மல்லிகா, துணைத் தலைவா் கே.வி. ராஜதுரை, ஒன்றிய பொருளாளா் சங்கரலிங்கம், மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவா் குணசேகரன், நங்கைமொழி ஊராட்சித் தலைவா் விஜயராஜா, செட்டியாபத்து ஊராட்சித் துணைத் தலைவா் செல்வகுமாா், ஒன்றிய எம்ஜிஆா் மன்றச்செயலா் பொன்ராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.