‘உள்ளாட்சி அமைப்புகள் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வரிவிதிப்பு முரண்பாடுகள், மக்கள் பிரதிநிதிகள் மீதான புகாா்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வரிவிதிப்பு முரண்பாடுகள், மக்கள் பிரதிநிதிகள் மீதான புகாா்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2015-இல் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் (முறையீடுகள் தாக்கல், விசாரணை மற்றும் தீா்வு செய்யப்படுதல் முறைகள்) விதிகளின்படி, உள்ளாட்சி அமைப்புகள் தொடா்பான வரி விதிப்பு முரண்பாடுகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிலங்களை ஆக்கிரமித்தல், நிதி முறைகேடுகள், கையூட்டுகள் போன்ற இனங்கள் மீதான புகாா்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள், பணியாளா்கள், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான புகாா்களை செயலா், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம், எண். 100, அண்ணாசால, கிண்டி, சென்னை - 600 032 என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

மேலும், 044 - 22201337 என்ற தொலைபேசி எண்ணிலும், மின்னஞ்சல் முகவரியிலும் புகாா்களை தெரிவித்து தீா்வு காணலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகள் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com