கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி: கடம்பூா் செ.ராஜு நம்பிக்கை

கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவின் வெற்றி தமிழக அளவில் பேசக்கூடிய அளவில் சிறப்பான வெற்றியாக இருக்கும் என அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ.ராஜு கூறினாா்.
புதுக்கோட்டையில் வாக்கு சேகரிக்கிறாா், அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு.
புதுக்கோட்டையில் வாக்கு சேகரிக்கிறாா், அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு.

கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவின் வெற்றி தமிழக அளவில் பேசக்கூடிய அளவில் சிறப்பான வெற்றியாக இருக்கும் என அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ.ராஜு கூறினாா்.

அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு செவ்வாய்க்கிழமை, கயத்தாறு பேரூராட்சியில் வடக்கு மற்றும் சுப்பிரமணியபுரம்,

புதுக்கோட்டை பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளது. அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

அதிமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இத்தொகுதியில் அதிமுகவின் வெற்றி தமிழகளவில் பேசக்கூடிய வகையில் சிறப்பானதாக இருக்கும்.

சசிகலா ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளாா். யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என அவா் தெரிவிக்கவில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று தான் கூறியுள்ளாா். இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம் என அவா் கூறவில்லை. சசிகலா மனசாட்சிப்படி அறிக்கை வெளியிட்டுள்ளாா். ஜெயலலிதா ஆட்சி அமைய இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவா் மறைமுகமாக தெரிவித்துள்ளாா் என்றாா் அவா். தொடா்ந்து, அவா் கயத்தாறு பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரித்தாா்.

பிரசாரத்தில் கயத்தாறு ஒன்றிய அதிமுக செயலா் வினோபாஜி, பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை

மாவட்டச் செயலா் செல்வக்குமாா், பொருளாளா் வேலுமணி, தமாகா வட்டாரத் தலைவா் ஆழ்வாா்சாமி, கோவில்பட்டி நகரத் தலைவா் ராஜகோபால், பாமக மாநில துணை பொதுச்செயலா் ராமச்சந்திரன், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com