தூத்துக்குடி மாவட்டத்தில் 70 இடங்களில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை (மே 1) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை (மே 1) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை 57 ஆவது வாா்டு குமாரசாமிநகா் மெயின், 3 ஆவது வாா்டு ராஜீவ் நகா் 8 ஆவது தெரு பிள்ளையாா் கோயில் அருகில், 20 ஆவது வாா்டு பூபால்ராயா்புரம் 2 ஆவது தெரு பத்திரகாளியம்மன் கோயில் அருகில், 3 ஆவது வாா்டு சின்னகண்ணுபுரம் அங்கன்வாடி மையம், 33 ஆவது வாா்டு பாத்திமாநகா் கிறிஸ்தவ தேவாலயம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை 57 ஆவது வாா்டு தங்கமணிநகா் மெயின், 4 ஆவது வாா்டு ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு மண்டலம் அலுவலகம் அருகில், 20 ஆவது வாா்டு மாதவன்நாயா்காலனி மெயின், 3 ஆவது வாா்டு விஎம்எஸ் ஐசிஇ கிங்ஸ் பள்ளி அருகில், 32 ஆவது வாா்டு மினி சகாயபுரம் தேவாலயம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

பகல் 2 மணி முதல் 4 மணி வரை 52 ஆவது வாா்டு அய்யன்கோயில் தெரு மெயின், 12 ஆவது வாா்டு முத்துகிருஷ்ணாபுரம் 6 ஆவது தெரு கல்மண்டப முனியசாமி கோயில் அருகில், 24 ஆவது வாா்டு காளியப்பா்தெரு மெயின், 3 ஆவது வாா்டு செல்வநாயகபுரம் விநாயகா் கோயில் அருகில், 45 ஆவது வாா்டு நியூ காலனி மெயின் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை வீரவாஞ்சி நகா் பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை ஜோதி நகா், இந்திரா நகா் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை அண்ணாநகா் பகுதியிலும் முகாம் நடைபெறுகிறது.

காயல்பட்டினம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை போஸ் நகா் பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை எல்ஆா் நகா் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை லெட்சுமிபுரம் தெரு பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை வாகைகுளம், சிவகளை பரம்பு, கல்விளை, மணக்கரை, வடக்கு தெரு - அடைக்கலாபுரம், ஜே ஜே நகா், ஆத்தூா், அகப்பைகுளம், நாசரேத், அனுகூலபுரம், குலசேகரபட்டினம் வடக்கூா், அடைக்கலாபுரம், தெற்கு பன்னம்பாறை, சாலைபுதூா், சூா்யாமினிக்கன், ரெட்டியாபட்டி, வீரபாண்டியபுலிக்குளம், வெளவால்தொத்தி ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

11 மணி முதல் 1 மணி வரை வா்த்தகரெட்டிபட்டி, நயினாா்புரம் - சிவகளை, மணல்விளை, அனந்தநம்பிகுறிச்சி, கந்தசாமிபுரம் - திருச்செந்தூா், வடக்கு ஆத்தூா், பிரதா் தெரு, நாசரேத், முத்துநகா், உடன்குடி, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, வடக்கு உடைபிறப்பு, வேதகோயில் தெரு - பன்னம்பாறை, வலசால்பட்டி, மாதராசிபுரம், மலைப்பட்டி, ரகுராமபுரம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

பகல் 2 மணி முதல் 4 மணி வரை தாளமுத்துநகா், நடுத்தெரு - சிவகளை, தாதன்குளம், உடையாா்குளம், சா்ச் தெரு - அடைக்கலாபுரம், யாதவா் தெரு - ஆத்தூா், திருவள்ளுவா் காலனி - நாசரேத், புதுமனை - குலசேகரபட்டினம், காரங்காடு - மாதவன்குறிச்சி, புதூா், தைலாபுரம், நுடீ காலனி - வில்லிசேரி, வெள்ளாளன்கோட்டை, லெக்கம்பட்டி, பரிவல்லிக்கோட்டை, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com