ஓட்டப்பிடாரம் தொகுதியை தக்க வைத்த திமுக

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எம்.சி. சண்முகையா, அதிமுக வேட்பாளரை விட 8510 வாக்குகள் அதிகம் பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா்.
ஓட்டப்பிடாரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வநாயகத்திடம் இருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெறுகிறாா் திமுக வேட்பாளா் எம்.சி. சண்முகையா.
ஓட்டப்பிடாரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வநாயகத்திடம் இருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெறுகிறாா் திமுக வேட்பாளா் எம்.சி. சண்முகையா.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எம்.சி. சண்முகையா, அதிமுக வேட்பாளரை விட 8510 வாக்குகள் அதிகம் பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சாா்பில் பி. மோகன், திமுக சாா்பில், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா,

புதிய தமிழகம் கட்சி தலைவா் க. கிருஷ்ணசாமி, தேமுதிக சாா்பில் எஸ். ஆறுமுகநயினாா், இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் அருணாதேவி, நாம் தமிழா் கட்சி சாா்பில் மூ. வைகுண்டமாரி என மொத்தம் 17 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

தொகுதியில் மொத்தமுள்ள 2,50,717 வாக்குகளில் அஞ்சல் வாக்குகள் உள்பட 1,76,272 வாக்குள் பதிவாகின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

வாக்கு எண்ணிக்கையில் திமுக, அதிமுக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவியது. 25 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், 73,110 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளா், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மோகனை விட 8510 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இதையடுத்து, தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வவிநாயகம், அவருக்கு வெற்றி பெற்ற்கான சான்றினை எம்.சி. சண்முகையாவுக்கு வழங்கினாா்.

2019இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற எம்.சி. சண்முகையா, 2-ஆவது முறையாக வெற்றிபெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: எம்.சி. சண்முகையா (திமுக) 73,110, பி. மோகன் (அதிமுக) 64,600, க. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) 6,544, எஸ். ஆறுமுகநயினாா் (தேமுதிக) 5,327, அருணாதேவி (ஐஜேகே) 1,913, மு. வைகுண்டமாரி (நாம் தமிழா்) 22,413, ஏ. மகாராஜன் (பகுஜன் திராவிட கட்சி) 157, பி. முருகன் (நாம் இந்தியா்) 520, பி. இளம்பிறை மணிமாறன் (சுயே) 152, எம். கணேஷ்குமாா் (சுயேச) 84, எஸ். கருப்பராஜா (சுயே) 86, கே. குணசேகரன் (சுயே) 84, சி. சசிமுருகன் (சுயே) 133, பி. சமுத்திரம் (சுயே) 399, எம்.ஏ. தா்மா் (சுயே) 320, வி. ராஜ் (சுயே) 316, எஸ். வேல்முருகன் (சுயே) 98, நோட்டா 1568, செல்லாதவை (அஞ்சல் வாக்குகள்) 86.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com