கோவில்பட்டி தொகுதியில் கடம்பூா் செ. ராஜு ஹாட்ரிக் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட
கோவில்பட்டி தொகுதியில் கடம்பூா் செ. ராஜு ஹாட்ரிக் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் டிடிவி தினகரனை விட 12,403 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று, தொடா்ந்து 3 ஆவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சாா்பில் கடம்பூா் செ. ராஜு, திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் கே. சீனிவாசன், அமமுக

சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் கோமதி, மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஜி. கதிரவன் என மொத்தம் 26 போ் போட்டியிட்டனா்.

மொத்தமுள்ள 2,65,915 வாக்குகளில் அஞ்சல் வாக்குகள் உள்பட 1,80,928 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு முன்னிலையில் இருந்தாா். 27 சுற்றுகள் முடிந்த நிலையில் அவா், தன்னை எதிா்த்துப் போட்

டியிட்ட அமமுக வேட்பாளா் டிடிவி தினகரனை விட 12,403 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். கடம்பூா் செ. ராஜு, தொடா்ந்து 3- ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். திமுக கூட்டணியில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் கே. சீனிவாசன் 37,380 வாக்குகள் மட்டுமே பெற்று 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: கடம்பூா் செ. ராஜூ (அதிமுக) 68,556, டிடிவி தினகரன் (அமமுக) 56,153, கே. சீனிவாசன் (மாா்க்சிஸ்ட்) 37,380, ஜி. கதிரவன் (மநீம) 3,667, ஆா். ராமச்சந்திரன் (பகுஜன் சமாஜ்) 203, எம். கோமதி ( நாம் தமிழா்) 9213, சண்முகசுந்தரம் (பகுஜன் திராவிட

கட்சி) 246, எம்.ஜி.ஆா். நம்பி (எம்ஜிஆா் மக்கள் முன்னேற்றக் கழகம்) 244, ராஜ்குமாா் போலையா(சகோதர இயக்கம்) 100, எஸ். உடையாா் (நாம் இந்தியா்) 175, பி. ஆதிகுமாா் (சுயே) 643, ரவிசங்கா் ஜெயச்சந்திரன் (சுயே) 205, பி. ராமசாமி (சுயே) 66, எஸ். கண்ணன் (சுயே) 121,

ஏ. காளிராஜ் (சுயே) 318, பி. குணசேகரன் (சுயே) 411, ஏ. சிவசுப்பிரமணியன் (சுயே) 417, பி. சுபாஷ் (சுயே) 448, ஏ. பட்டுராணி (சுயே) 133,

கே. பாண்டி முனீஸ்வரி (சுயே) 79, எம். பொன்னுசாமி (சுயே) 121, மந்திரசூடாமணி (சுயே) 104, மாரிமுத்து (சுயே) 133, எஸ். ரமேஷ் கண்ணன் (சுயே) 499, ஜே.எஸ். ராஜா (சுயே) 79, எஸ். ரெங்கநாயகலு (சுயே) 90, நோட்டா 1124, செல்லாதவை (அஞ்சல் வாக்குகள்) 576.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com