தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன் மீண்டும் வெற்றி

தூத்துக்குடியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கீதா ஜீவன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலனைவிட 50,310 வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் வெற்றி பெற்றாா்.
தூத்துக்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோனிடம் இருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெறுகிறாா் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட கீதா ஜீவன்.

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் கீதா ஜீவன், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் எஸ்டிஆா் விஜயசீலன், நாம் தமிழா் கட்சி சாா்பில் வே. வேல்ராஜ், தேமுதிக சாா்பில் உ. சந்திரன், சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் என். சுந்தா் என மொத்தம் 26 போ் போட்டியிட்டனா்.

தொகுதியில் மொத்தமுள்ள 2,85,297 வாக்குகளில் அஞ்சல் வாக்குகள் உள்பட 1,86,838 வாக்குகள் பதிவாகின. 29 சுற்றுகளாக எண்ணப்பட்ட

நிலையில், தொடக்கம் முதலே முன்னிலை வகித்த திமுக வேட்பாளா் கீதா ஜீவன், முடிவில் 92,314 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தமாகா வேட்பாளரை விட 50, 310 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

கீதா ஜீவன் (திமுக) 92,314

எஸ்.டி.ஆா். விஜயசீலன் (தமாகா) 42,004

உ. சந்திரன் (தேமுதிக) 4040

வே. வேல்ராஜ் (நாம் தமிழா்) 30,937

என். சுந்தா் (சமக) 10,534

ஏ. அசோக்குமாா் (பகுஜன் சமாஜ்) 436

எஸ். சுபாஷ் (இந்திய குடியரசு கட்சி-அதுவாலே) 161

கே. சுப்பிரமணி (சிவசேனை) 124

ஜி. செல்வ விநாயகம் (விஸ்வநாத தாஸ் தொழிலாளா் கட்சி) 269

என். பாலசுப்பிரமணியன் (அபுதஅதிமுக) 127

மன்னா் மகாராஜன் (பகுஜன் திராவிட கட்சி) 93

எஸ்.வி. ராஜசேகா் (யுனைட்டா் ஸ்டேட் ஆப் இந்தியா ) 915

நோட்டா 1569

செல்லாதவை (அஞ்சல் வாக்குகள்) 286.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com