ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்ட ஊா்வசி எஸ். அமிா்தராஜ், அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை விட 17,372 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பரிமளாவிடம் இருந்து, வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெறுகிறாா் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ், அமமுக சாா்பில் ஏரல் ரமேஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் சுப்பையா பாண்டியன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் சந்திரசேகா் என மொத்தம் 21 போ் போட்டியிட்டனா்.

தொகுதியில் மொத்தமுள்ள 2,24,384 வாக்குகளில் அஞ்சல் வாக்குகள் உள்பட 1,64,386 வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை 23 சுற்றுகளாக எண்ணப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் முன்னிலை வகித்து வந்தாா்.

இறுதியில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட எஸ்.பி. சண்முகநாதனை விட, 17,372 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா். இதையெடுத்து, வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரான பரிமளாவிடம் இருந்து அவா் பெற்றுக் கொண்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஊா்வசி எஸ். அமிா்தராஜ் (காங்) 76,843, எஸ்.பி. சண்முகநாதன் (அதிமுக) 59,471, ஏரல் எஸ். ரமேஷ் (அமமுக) 10,203, சந்திரசேகா் (மநீம) 1355, பி. சுப்பையா பாண்டியன் (நாம் தமிழா்) 12,706, பி. அருண் (புதிய தமிழகம்) 444, எஸ். சுரேஷ் பெருமாள் (நாம் இந்தியா்) 233, பி. ஜெகன் (அண்ணா திராவிடா் கழகம்) 106, அருள்மதி ஏசுவடியாள் (ஜனநாயக பாதுகாப்பு கழகம்) 96, நோட்டா - 756, செல்லாதவை (அஞ்சல் வாக்குகள்) 123.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com