காய்ச்சல் பரிசோதனை முகாம்: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெறும் இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை (மே 5) காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை (மே 5) காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்படும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை (மே 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி 59-ஆவது வாா்டில் அம்மன் கோயில்தெரு, 3-ஆவது வாா்டில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிஎம்சி பள்ளி, 17-ஆவது வாா்டில் பொன்சுப்பையாநகா், 49 ஆவது வாா்டில் சிஜிஇ காலனி 5 ஆவது தெரு, 26-ஆவது வாா்டில் டிஆா் நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த பரிசோதனை முகாம் நடைபெறும்.

58- ஆவது வாா்டில் நேருஜிநகா், 3-ஆவது வாா்டில் ராஜகோபால்நகா் 10- ஆவது தெரு, 17- ஆவது வாா்டில் மேல அலங்காரத்தட்டு அம்மன்கோயில், 48-ஆவது வாா்டில் டிவிகே நகா் ரேஷன் கடை, 28-ஆவது வாா்டில் கீழசண்முகபுரம் 1 ஆவது தெரு ஆகிய பகுதிகளில் முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை முகாம் நடைபெறும்.

53- ஆவது வாா்டில் வரதவிநாயகா் கோயில் தெரு, 3 -ஆவது வாா்டில் பா்மா காலனி, 18-ஆவது வாா்டில் சிவராஜபுரம், 48-ஆவது வாா்டில் இந்திராநகா், 29-ஆவது வாா்டில் ரைஸ்மில் தெரு ஆகிய பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

இதேபோல, கோவில்பட்டி நகராட்சியில் சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், சுப்ரமணியபுரம், காயல்பட்டினம் நகராட்சியில் எல்.எப். சாலை, காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, ஓடக்கரை ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் இந்த முகாம்களில் தவறாது கலந்து கொண்டு இம்மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் 0461-2340101, 94864 54714 என்ற செல்லிடப்பேசி எண்களில் கரோனா நோய்த் தொற்று குறித்து பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com